அத்தியாயம் - XII - விடுமுறை(Leave)
விடுமுறை தொடர்பான பொது விடயங்கள்
அரசசேவையில் விடுமுறை ஒரு சலுகையே அன்றி உரிமையல்ல.
சேவையின் அவசியம் கருதி அனுமதிக்கப்பட்ட விடுமுறைகள் குறைக்கப்படலாம் அல்லது இரத்துச் செய்யப்படலாம்.
உள்நாட்டில் விடுமுறையைப் பெற “பொது 125A” படிவத்தில் 7 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
வெளிநாடொன்றிற்கு விடுமுறையில் செல்வதாயின் “பொது 126” படிவத்தில் 3 மாதத்திற்கு குறையாத காலப்பகுதிக்கு முன் விண்ணப்பித்தல் வேண்டும்.
விடுமுறை விபரங்கள் “பொது 190” பதிவேட்டில் பேணப்படல் வேண்டும்.
உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றத்தில் சென்றிருப்பின் அவரின் முதல் நியமனத்திலிருந்து அவரால் பெறப்பட்ட ஓய்வு, சுகவீன விடுமுறை, அரைச்சம்பளவிடுமுறை, சம்பளமற்ற விடுமுறை மற்றும் 01.01.2006 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ளப்பட்ட அமையவிடுமுறை(பொ.நி.சு.இல 24/2007) என்பன புதிய சேவை நிலையத்திற்கு அனுப்பப்படல் வேண்டும்.
அரைச்சம்பள விடுமுறை, சம்பளமற்ற விடுமுறை மற்றும் வெளிநாடு ஒன்றில் பெறப்படும். ஒய்வு விடுமுறை என்பன கணிப்பிடப்படும் போது சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்.
வாரத்தில் 51/2 நாட்கள் கடமை புரிபவர்களால் சனிக்கிழமை பெறப்படும் விடுமுறை அரை நாளாக கணிக்கப்படும். (பொ.நி.சு.இல 04/95)
பொதுவாக திணைக்களத்தலைவரே தன் கீழ் பணிபுரிபவர்களின் விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரியாவார். எனினும் திணைக்களத் தலைவரின் விடுமுறை செயலாளரினால் அனுமதிக்கப்படும். திருப்திகரமான பதில்கடமை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரிக்குரியதாகும்.
No comments:
Post a Comment